சுபமுகூர்த்த நாளையொட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம்


சுபமுகூர்த்த நாளையொட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம்
x

சுபமுகூர்த்தம் உள்ளிட்ட சிறப்பான நாட்களில் கிரயம், ஒப்பந்தம், உயில், செட்டில்மெண்ட் உள்ளிட்டவற்றுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

சென்னை,

சுபமுகூர்த்தம் உள்ளிட்ட சிறப்பான நாட்களில் கிரயம், ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், உயில், செட்டில்மெண்ட் உள்ளிட்டவற்றுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதன்படி சுபமுகூர்த்த நாளான நேற்று சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. திருமணம் மற்றும் நிலங்களை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். இதனால் வழக்கத்தைவிட பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறும்போது, "ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் சார்-பதிவாளர் மற்றும் பதிவாளர் அலுவலகங்களுக்கு உள்ளே வரக்கூடாது என்ற விதி உள்ளது. இடைத்தரகர்கள் மூலம் பதிவுத்துறையில் தவறு நடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்பவர்கள் அவர்களே வந்து அலுவலகத்தில் பத்திரத்தை பெற்றுகொள்ளவும், கூட்டம் அதிகமாக இருந்ததால், வழக்கமாக வழங்கும் 100 டோக்கன்களுக்கு பதிலாக கூடுதலாக 150 டோக்கன்கள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் அதிக நேரம் பதிவுத்துறை அலுவலகங்களில் இருக்காமல் விரைவாக பணிகளை முடிக்க பத்திரப்பதிவு துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது" என்றார்.


Next Story