பாதாம், முந்திரியால் கிரீடம் - லட்சங்களில் உருவான மாலை! | திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை


பாதாம், முந்திரியால் கிரீடம் - லட்சங்களில் உருவான மாலை! | திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை
x

திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் பாதாம், முந்திரியால் கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழா நாட்களில் கோவில் மாட வீதியில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு வண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

இந்த நிலையில், வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் திருமஞ்சனத்தில் மலையப்ப சுவாமியை அலங்காரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், மற்றும் உலர்ந்த பழங்கள், அரிய வகை மலர்கள் ஆகியவற்றை கொண்டு கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டு உள்ளது. 5 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கிரீடம், மாலையை திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர்.


Next Story