சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. விளையாடும் போட்டியை காண செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்.!


சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. விளையாடும் போட்டியை காண செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்.!
x

போட்டியை காணும் ரசிகர்களுக்காக மெட்ரோ ரயில் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி போட்டி நாட்களில் ரசிகர்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், டிக்கெட்டில் உள்ள க்யூ ஆர் கோடு மற்றும் பார் கோடினை ஐ பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்றும், இதற்காக மெட்ரோ ரயில் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானம் வரை மினி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story