ஆல்பேட்டை சோதனை சாவடியில் நள்ளிரவில் போலீஸ் குவிப்பு


ஆல்பேட்டை சோதனை சாவடியில் நள்ளிரவில் போலீஸ் குவிப்பு
x

ஆல்பேட்டை சோதனை சாவடியில் நள்ளிரவில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் வடமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் வசிக்கும் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் புதுச்சேரி, கடலூர் வழியாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். இதனால் கடலூர்-புதுச்சேரி எல்லையில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நள்ளிரவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அனைத்து வாகனங்களையும் மறித்து சோதனை செய்தனர். மேலும் யாரேனும் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்கிறார்களா? என்றும் சோதனையிட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவில் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story