சேதமடைந்த கட்டிடத்தில் கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம்


சேதமடைந்த கட்டிடத்தில் கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம்
x

சேதமடைந்த கட்டிடத்தில் கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம்

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலையில் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வரும் கரும்பு ஒட்டுண்ணி மையத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டுண்ணி மையம்

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.இந்த கட்டிடம் போதிய பராமரிப்பில்லாமல் பழுதடைந்த நிலையில் இருந்ததால் புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இந்த பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டது.

தற்போது வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் புதிய கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகின்றன.ஆனால் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் தற்போது கரும்பு ஒட்டுண்ணி மையம் ஆபத்தான முறையில் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தோட்டக்கலைத்துறை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்துக்கான கரும்பு ஒட்டுண்ணி மையம் உடுமலையில் செயல்பட்டு வருகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்பு ஒட்டுண்ணி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது இந்த மையத்தில் ஒரு பெண் பணியாளர் பணியாற்றி வருகிறார்.ஆனால் இந்த மையம் செயல்பட்டு வரும் கட்டிடம் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளது.மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுகிறது.இது பணியாளரின் தலையிலோ விவசாயிகளின் தலையிலோ விழுந்தால் மிகப்பெரிய அபாயத்தை உருவாக்கும்.மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களை இருப்பு வைப்பதற்கான கிடங்கு வசதி இல்லை.இதனால் இந்த சேதமடைந்த கட்டிடத்திலேயே பொருட்களை இருப்பு வைத்துள்ளனர்.இது அதிகாரிகளுக்கும் ஆபத்தை உருவாக்கலாம்.எனவே கரும்பு ஒட்டுண்ணி மையம் மற்றும் தோட்டக்கலைத்துறை கிடங்குக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.மேலும் இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.



Next Story