குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு


குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
x

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருச்சி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 24ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணி அளவில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நாளை கல்லணையை வந்தடையும் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அணை திறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story