சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தானியங்கி எந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில்தானியங்கி எந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி
சேலம்
சேலம் மாநகராட்சியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று தானியங்கி எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தானியங்கி எந்திரத்தில் மஞ்சப்பை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி மாற்றுப்பொருட்களான துணிப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன பைகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.1.33 லட்சம் மதிப்பிலான தானியங்கி எந்திரத்தின் மூலம் மஞ்சப்பையை பொதுமக்கள் ரூ.10-ஐ எந்திரத்தில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், செயற்பொறியாளர்கள் பழனிசாமி, திலகா மற்றும் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.