வாடிக்கையாளர் சேவை நேரம் நீட்டிக்கப்படும்


வாடிக்கையாளர் சேவை நேரம் நீட்டிக்கப்படும்
x

வாடிக்கையாளர் சேவை நேரம் நீட்டிக்கப்படும் என்று வங்கி அதிகாரி தெரிவித்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், பாலையூரை சேர்ந்த வங்கி அதிகாரி வெங்கடேஷ்:- இது நிச்சயம் வரவேற்கக்கூடிய நடைமுறையாகும். பணம் செலுத்துதல், எடுத்தல், கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஆன்லைன் (டிஜிட்டல்) மயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் இந்த திட்டம் தேவையானதே. இது நடைமுறைக்கு வருமாயின் இதனால் வங்கி பணியாளர்கள் வங்கியில் கூடுதல் புத்துணர்வோடு பணியாற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் அனைத்து சனிக்கிழமைகள் விடுமுறை வரும் பட்சத்தில், அதை ஈடுகட்டும் விதமாக வங்கி வாடிக்கையாளர்கள் சேவை நேரம் நீட்டிக்கப்படும். மேலும் வங்கி சேவைகளை நேரடியாக வந்து பெரும் நிலையை வரும் காலங்களில் வாடிக்கையாளர்களே குறைத்துக் கொள்வார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே அதிகம் விரும்புவார்கள். இது ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக தெரிந்தாலும், போகப்போக பழகிவிடும். எனவே இந்த முன்மொழிவானது வங்கி பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் இருதரப்புக்குமே நன்மையை விளைவிக்கும்.


Next Story