சுங்கச்சாவடி ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்


சுங்கச்சாவடி ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
x

சுங்கச்சாவடி ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் நிற்கிறோம். மீண்டும் பணியில் அமர்த்தும்வரை போராடுவோம் என்று கூறினர்.


Next Story