சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்; பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பேர் தொடர் போராட்டம்


சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்; பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பேர் தொடர் போராட்டம்
x

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றம் இந்த தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த ஊழியர்களும் 55-வது நாட்களாக போராடி வந்தனர். இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்களை தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவில் இருந்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story