முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்தி வெட்டு
வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி அடுத்த புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 38), எலக்ட்ரீசியன். இவரது மனைவி துரையரசி (33).
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமு (50) என்பவரிடம் பணத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பதி கொடுக்காமல் இருந்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து துரையரசியிடம் ராமு, அவரது மனைவி ஆராய்யி, மகன் அஜித், உறவினர் பெருமாள் ஆகியோர் சென்று பணத்தை கேட்டதாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேரும் சேர்ந்து துரையரசியை தாக்கி கத்தியால் கையில் வெட்டினர்.
இதுகுறித்து துரையரசி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் 4 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story