ஓட்டல் ஊழியரை வெட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஓட்டல் ஊழியரை வெட்டிய  2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 24 July 2022 2:23 PM GMT (Updated: 25 July 2022 7:44 AM GMT)

ஓட்டல் ஊழியரை வெட்டிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தேனி

உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர், கம்பம் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இவர், வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் உத்தமபாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

உத்தமபாளையம் பி.டி.ஆர்.காலனி அருகே வந்தபோது, மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த நாகராஜ் (42), ரஞ்சித் (40) ஆகிய 2 பேர் வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதையடுத்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நாகராஜ், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.

.


Next Story