குடும்பத்தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது
விக்கிரமங்கலம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் காலனி தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சங்கர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கைது
இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் வைத்திருந்த அரிவாளால் ஐஸ்வர்யாவின் 2 கைகளிலும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.