விவசாயிக்கு வெட்டு


விவசாயிக்கு வெட்டு
x

முனைஞ்சிப்பட்டி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அருகே வடக்கு காடன்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (வயது 63). விவசாயி. இவரது தம்பி ராமர் ( 60). சம்பவத்தன்று அதே ஊரைச்சேர்ந்த தங்கராஜ் என்பவர் ராமர் மற்றும் ராமர் மகன் ஜெயராமன் ஆகியோருடன் சேர்ந்து பஞ்சாயத்துக்கு பைப்லைன் தோண்டுவது குறித்து பரமசிவன் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த வேதமாணிக்கம், பரமசிவனுக்கு ஆதரவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து வேதமாணிக்கத்தை மண்வெட்டியால் தலையில் தாக்கினர். இதுபற்றி வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமர், தங்கராஜ், ஜெயராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story