சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவகங்கையை அடுத்த சோழபுரம் ஸ்ரீ ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கணேஷ் வரவேற்று பேசினார்.
சைபர் கிரைம் தொழில் நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், ஏட்டுக்கள் முத்துராமன் , சாணக்கியன் ஆகியோர் ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் கடன், ஆன்லைன் பணப்பரிமாற்றம் ஆகியவற்றில் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
Related Tags :
Next Story