சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x

சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். தன் சொந்த தொகுதியான கொளத்தூர், திருவிக நகர், பெரம்பூர், பாடி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு பணியின் போது அமைச்சர்கள் சேகர்பாபு , துரைமுருகன், கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி. பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story