தி.மு.க. பெண் கவுன்சிலர் போலீசில் புகார்


தி.மு.க. பெண் கவுன்சிலர் போலீசில் புகார்
x

பணம் பறிக்கும் நோக்கத்தில் தன்னை மிரட்டுவதாக, தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

திண்டுக்கல்

ஆத்தூர் தாலுகா சாமியார்பட்டியை சேர்ந்தவர் நாகவள்ளி. தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். இவர், நேற்று சிலருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு உதவும் வகையில், 2 குழுக்களுக்கு வங்கியில் தலா ரூ.4½ லட்சம் வீதம் கடன் வழங்க சிபாரிசு செய்தேன்.

இதையடுத்து 2 குழுக்களின் நிர்வாகிகளும் வங்கியில் கடன் பெற்று, உறுப்பினர்களுக்கு வழங்கினர். அதில் ஒரு குழுவின் உறுப்பினர்களிடம் வசூலித்த கடன் தொகை வங்கியில் திரும்ப செலுத்தியதாகவும், மற்றொரு குழுவினர் உறுப்பினர்களிடம் வசூலித்த பணத்தை வங்கியில் செலுத்தவில்லை என்றும் தெரிகிறது.

இதையடுத்து வங்கியில் இருந்து குழு உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் போட்டியில் என்னுடைய எதிரிகளுடன் சிலர் சேர்ந்து, என்னிடம் பணம் பறிக்க மிரட்டல் விடுக்கின்றனர். கடன் பெற்றுத்தர சிபாரிசு மட்டுமே செய்தேன். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story