டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் தெரு விளக்குகள் பொருத்தகோரி பொதுமக்கள் மனு


டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில்  தெரு விளக்குகள் பொருத்தகோரி பொதுமக்கள் மனு
x

டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் தெருவிளக்குகள் பொருத்தகோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தேனி

ஆண்டிப்பட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் 20 கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக சத்யா நகர், ஜே.ஜே. நகர், காந்திநகர், சீதாராம் தாஸ் நகர் ஆகிய பகுதிகள் ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு மட்டும் சுமார் 7,000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் கால்வாய் வசதி, பாலம், தார் சாலை, சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெரு விளக்குகள் சரியாக அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஏற்கனவே பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மின்விளக்கு பொருத்தகோரி ஊராட்சி தலைவர் வேலுமணி பாண்டியன் தலைமையில், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன், ஊராட்சி துணைத்தலைவர் மீரா கார்த்திகேயன், கவுன்சிலர்கள் அழகர்சாமி, பாலமுருகன், மச்சகாளை மற்றும் பொதுமக்கள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரனிடம் மனு அளித்தனர். இதையடுத்து தெருவிளக்குள் பொருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.


Next Story