தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதர் மண்டிய பொது கிணறு

நெல்லை மாநகராட்சி பாளையங்கேட்டை மண்டலம் 38-வது வார்டு தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு நிலை 2-ல் திருச்ெசந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ெபாது கிணறு பல ஆண்டுகளாக பயன்பாடற்று பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் கிணறு மற்றும் மோட்டார் அறையை சூழ்ந்து புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. கிணற்றில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். எனவே புதர்மண்டிய கிணற்றை தூர்வாரி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுகிறேன்.

-குருசாமி, வி.எம்.சத்திரம்.

குண்டும் குழியுமான சாலை

அம்பை தாலுகா சிவந்திபுரம் பஞ்சாயத்து தைப்பூச ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

- இஸ்ரவேல், சிவந்திபுரம்.

பயணிகள் நிழற்குடை தேவை

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பிரதான சாலை அருேக உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் பஸ்சுக்காக காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சண்முகசுப்பிரமணியன், நெல்லை.

ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு

முக்கூடல் பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு புதிதாக அமைக்கப்பட்டது. பின்னர் 2 மாதங்களுக்கு மேலாகியும் அதனை இரவில் இயக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் இரவில் இருள் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஆதிமூலம், முக்கூடல்.

சேதமடைந்த பாலம்

நெல்லை மேலப்பாளையம் பைபாஸ் சாலையில் உள்ள பாலம் சேதமடைந்து விரிசல் விழுந்த நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-சாகுல் ஹமீது, மேலப்பாளையம்.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கடலோர பாதுகாப்பு சோதனைச்சாவடியில் இருந்து முள்ளக்காடு வரையிலும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-டல்லஸ், அடைக்கலாபுரம்.

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து நா.முத்தையாபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் நிழற்கூடத்துக்குள் செல்லாமல் பயணிகள் வெளியில் நின்றே பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சேதமடைந்த நிழற்கூடத்தை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-தமிழ்பரிதி, மேல திருச்செந்தூர்.

குடிநீர் வினியோகம் அவசியம்

ஆழ்வார்திருநகரி யூனியன் திருக்கோளூர் பஞ்சாயத்து பால்குளம் கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு வீட்டு இணைப்புகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-வருண்குமார், பால்குளம்.

ஆபத்தான மின்மாற்றி

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை மயானத்தில் உள்ள மின்மாற்றியில் 2 மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. அந்த மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்மாற்றியில் புதிய மின்கம்பங்கள் அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

-ராஜா, சாத்தான்குளம்.

வேகத்தடையில் வர்ணம் வேண்டும்

உடன்குடி பெருமாள்புரம் மெயின் ரோட்டில் 3 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. ஆனால் அவற்றில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அங்கு வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டுகிறேன்.

-ஆறுமுகம், உடன்குடி.

ஆபத்தான மின்பெட்டி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா தவணை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் இணைப்பு பெட்டிக்கு மூடி அமைக்க வேண்டுகிறேன்.

-மூக்கையா, தவணை.

வேகத்தடை தேவை

கடையம் அருகே திருமலையப்பபுரம், ெதன்காசி - அம்ைப ெசல்லும் ரோட்டில் பள்ளிக்கூடம் அருகே வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதனால் மாணவர்கள் சாலையை கடப்பதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அங்கு பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

சேதமடைந்த சாலை

கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-முகம்மது இப்ராகிம், முதலியார்பட்டி.

நூலகத்துக்கு உதவியாளர் வேண்டும்

சிவகிரி அரசு நூலகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு உதவியாளர் நியமிக்கப்படாததால், நூலகர் விடுப்பு எடுக்கும் நாட்களில் நூலகம் மூடிக்கிடக்கிறது. எனவே நூலகத்தில் உதவியாளர் நியமிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-பாரதி, புளியங்குடி.

தெருநாய்கள் தொல்லை

சுரண்டை நகராட்சி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுகிறேன்.

-சேர்மக்கனி, சுரண்டை.


Next Story