தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருச்சி மாநகராட்சி செல்வநகரில் உள்ள கம்பர் தெருவில் இருந்து மாாியம்மன் அவென்யு தெருவிற்கு செல்லும் சாலை திருப்பத்தில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு லாரிகளில் பொருட்கள் ஏற்றி செல்லும் போது மின் கம்பிகள் மீது உரசி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு மின் கம்பிகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செல்வநகர்.

சாலைப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருச்சி மாநகராட்சி பெரியமிளகுபாறை வழியாக காமராஜபுரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை வரை உள்ள சாலையில் கடந்த 2 மாதங்களாக சீரமைப்பு பணி நடக்கிறது. இதற்காக சாலையில் ஜல்லி கற்கள் போட்ட படியே உள்ளது. இதனால் சாலையில் செல்லும் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் டயர் பஞ்சர் ஆவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

பொதுமக்கள், பெரியமிளகுபாறை.

எரியாத தெருவிளக்கு

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட ராணி மெய்யம்மை நகர், சாய் நகர், இ.பி. காலனி உள்பட பல பகுதிகளில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் இது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவா்கள் மாற்றி தருவார்கள் என கூறி வருகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி

வடிகால் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூர் கிராமத்தில் வடிகால் வசதி இல்லாமல் மழைநீர் தெருவில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினேஷ், தண்டலைப்புத்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி திருெவறும்பூர் பஞ்சாயத்து, கீழக்குறிச்சி வசந்தம் நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நாகரெத்தினம். வசந்தம் நகர்.

1 More update

Next Story