தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
ெநல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் 6-வது வார்டு கட்டபொம்மன் காலனி சுனை அம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தின் உச்சி பகுதியில் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-போஸ், விக்கிரமசிங்கபுரம்.
வேகத்தடை தேவை
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகம் முன்பு மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் ஆஸ்பத்திரி அருகில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-குருசாமி, வி.எம்.சத்திரம்.
குண்டும் குழியுமான சாலை
நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ் நிலைய பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றியதால், சாலையில் ஆங்காங்கே இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.
-லாரன்ஸ், நெல்லை.
* மானூரில் இருந்து எட்டாங்குளம், தெற்குபட்டி, சுப்பையாபுரம் வழியாக நெட்டூருக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பது அகலப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜ்குமார், சுப்பையாபுரம்.
தெருநாய்கள் தொல்லை
நெல்லை மேலப்பாளையம் 31-வது வார்டு கீழ வீரராகவபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எடுக்க கேட்டு கொள்கிறேன்
-நாதன், கீழவீரராகவபுரம்.
* தூத்துக்குடி தாளமுத்துநகர் வண்ணாரப்பேட்டை சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- வேணுராமலிங்கம், தூத்துக்குடி.
வாறுகால் தூர்வாரப்படுமா?
கோவில்பட்டி- மந்தித்தோப்பு சாலையில் காமராஜர் குடியிருப்பு பகுதியில் வாறுகால் தூர்வாரப்படாமல் குப்பைக்கூளமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதுடன், மழைக்காலத்தில் கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வார அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?
- பாலமுருகன், கோவில்பட்டி.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
திருச்செந்தூர் பால்பண்ணை தெருவில் கிருஷ்ணன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், குழாய் உடைப்பை உடனே சரிெசய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்
சாத்தான்குளம் அருகே புளியங்குளம் விலக்கு மெயின் ரோட்டில் புளியங்குளத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அதனை சீரமைப்பதற்காக சாலை முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. பின்னர் பல நாட்களாகியும் சாலை அமைக்கும் பணிகளை தொடங்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ராஜா, சாத்தான்குளம்.
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம், மூலைக்கரைப்பட்டி, நெல்லை வழியாக மதுரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக சாத்தான்குளம் செல்லும் இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் அதிகாலையிலே சொந்த ஊர்களுக்கு செல்ல எளிதாக இருந்தது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-சங்கர், சாத்தான்குளம்.