தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குரங்குகளை பிடிக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளுக்கு நாள் குரங்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்

நாய்கள் தொல்லை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அாியலூர்.

1 More update

Next Story