தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குவிந்து கிடக்கும் குப்பை


புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதி குப்பை கிடங்காக மாறி வருகிறது. அரசு அலுவலகம் அருகே இது போன்ற குப்பைகள் குவிந்து கிடப்பதால் ஏராளமான பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

போக்குவரத்து நெரிசல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, குப்பகுடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலை மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகளுக்கு அடிக்கடி கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சாலை குறுகிய அளவு உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலை அரிமளம் பகுதிக்கு இணைப்பு சாலையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலங்குடி.

எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 ரோடு பகுதிகளுக்கும் வெளிச்சம் தரும் வகையில் 7 மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த பல நாட்களாக 5 விளக்குகள் எரியாததால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்கு முக்கம் பகுதியில் இருந்து மல்லிகை புஞ்சை வழியாக செல்லும் இணைப்பு சாலையானது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் பள்ளங்களில் விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சிதிலமடைந்த நிலையில் உள்ள இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

கொசு மருந்து அடிக்கப்படுமா?

புதுக்கோட்டை நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வரப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரத்தில் இப்பகுதி மக்களை தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாருவதுடன் மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.


Next Story