தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

கழிவுகளை எரிப்பதால் புகை மண்டலம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூர் பகுதியில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் உள்ள கழிவுகளையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் தார்சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளை அவ்வப்போது தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அப்போது கழிவுகளில் ஈரம் இருப்பதால் ஏராளமான புகை ஏற்பட்டு தார்சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும், மற்ற வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு செல்கின்றனர். புகை மூட்டத்தால் அந்த பகுதியில் தார்சாலையே தெரியாமல் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்

பழுதடைந்த பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் அதியமான்கோட்டை மற்றும் ஓலப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் பிரிவு சாலை எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது பயணிகள் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாமல் வெயிலில் நின்று செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புகழூர்.

தெருவிளக்கு எரியவில்லை

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் கள்ளபொம்மன்பட்டி, ராஜலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியூர் சென்று விட்டு பஸ்சில் வந்து இறங்கியும், வெளியூருக்கு செல்ல காத்திருந்து பஸ்சில் ஏறியும் செல்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் அந்த பகுதியில் அச்சத்துடனேேய இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மஞ்சநாயக்கன்பட்டி

வங்கி ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதியில் சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த வங்கிக்கு ஏ.டி.எம். மையம் இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பணம் எடுக்க வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வங்கி ஏ.டி.எம். மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சங்கரசுப்பு, பாலவிடுதி.

தேங்கும் மழைநீரை அகற்ற வேண்டும்

கரூர் ஜவகர்பஜார் அருகே பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மழை சமயங்களில் இப்பள்ளி நுழைவுவாயில் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ேகட்டுக் ெகாள்கிேறாம்.

ெபாதுமக்கள், கரூர்.


Next Story