தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

தெருவிளக்கு சரிசெய்யப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு, பாவலர்நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொங்கி கொண்டிருந்த மின்விளக்கை சரிசெய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-கிருஷ்ணபிள்ளை, பாவலர்நகர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை சரியாக மூடாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், தடிக்காரண்கோணம்.

வீணாகும் குடிநீர்

ஈத்தாமொழி புதூர் அடுத்த தேரிமேல்விளையில் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த பகுதியில் சாலைக்கு கீழ் பதிக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாதமாக தண்ணீர் சாலையில் வீணாக பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து, குடிநீர் வீணாகுவததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

எரியாத தெரு விளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கலைநகர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே அதனை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை மாற்றி, புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.சரண்யா, கலைநகர்.

குரங்குகள் தொல்லை

திருவட்டார் தாலுகா, பொன்மனையை சுற்றி உள்ள பகுதியில் விளைநிலங்களில் பலா, வாழை, தென்னை போன்ற மரங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குரங்குகள் விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் மின்கம்பங்களில் ஏறி அங்கும், இங்கும் தாவுகின்றன. இதனால் மின்சாரம் தாக்கி குரங்குகள் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மேத்யூ டி ஜான், பொன்மனை.

பட்ட மரத்தை அகற்ற வேண்டும்

கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட முட்டைக்காடு குருசடி பகுதியில் புத்தன் ஆறு சானல் கரையோரம் அயனி மரம் பட்ட நிலையில் நிற்கிறது. இந்த பாதையை அப்பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் குடியிருப்புகளும் உள்ளன. பட்ட மரத்தில் இருந்து அவ்வப்போது கிளைகள் முறிந்து விழுகின்றன. எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்ட மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரா.செ.டேவிட், முட்டைக்காடு.

சேதமடைந்த சாலை

திருவட்டார் ஊராட்சிக்குட்பட்ட காட்டாத்துறையில் இருந்து வாறுவிளை வரை சாலை செல்கிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெபதாஸ், வாறுவிளை.


Next Story