தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

மின்கம்பம் மாற்றப்பட்டது

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட சாஸ்தான் கரை டிப்போ பின்புறம் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய கம்பத்தை நட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தொிவித்துள்ளனர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

நாகர்கோவிலில் இருந்து இறச்சகுளத்துக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பள்ளத்தை மண் போட்டு மூடிவிட்டு, சாலையை சீரமைக்காமல் விட்டு விட்டனர். இதனால் அந்த பகுதியில் மழை பெய்ததால், சகதி காடாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாடசாமி, இறச்சகுளம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கட்டிமாங்கோடு பகுதியில் ஒரு குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து பல ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக கிணற்றை பராமரிக்காததால் கிணற்றில் ஆலமரம் வளர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிணற்றை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிதம்பரலிங்கம், கட்டிமாங்கோடு.

சேதமடைந்த சாலை

கரும்பாட்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கோட்டையடி - பொற்றையடியில் இருந்து பிரிந்து சாமிதோப்பிற்கு சாலை செல்கிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

போக்குவரத்து நெருக்கடி

அழகியமண்டபம் -மேக்காமண்டபம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அலிவர், அழகியமண்டபம்.

விபத்து அபாயம்

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் நடுத்தெரு உள்ளது. இந்த தெருவில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் உள்ள கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செ.காந்திராஜ், அஞ்சுகிராமம்.


Next Story