தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

மயான கொட்டகை வேண்டும்

அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராம் புதுக்காலனி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள யாரேனும் இறந்தால் அவர்களை எரிப்பதற்கு மாயனா கொட்டகை இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், முத்துசேர்வாமடம்.

சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், இலங்கைசேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ெபாதுமக்கள், இலங்கைசேரி

வடிகால் வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வீட்டின் உள்ளே சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், உடையார்பாளையம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரை சேகரிக்க முடியாததால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி

1 More update

Next Story