தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

நாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள தெப்பக்குளம், நால்ரோடு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சமயபுரம்.

மாற்றுத்திறனாளி அலுவலகம் இடம் மாற்றப்படுமா?

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் நீதிமன்ற பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் ஜெராக்ஸ் எடுப்பதற்கு கூட பஸ் நிலைய பகுதிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றுதிறனாளி அலுவலகத்தை மெயின் சாலை மற்றும் பஸ் நிறுத்தம் உள்ள பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராஜா, திருச்சி.

குடிநீர் பற்றாக்குறை

திருச்சி மாவட்டம், அல்லூர் ஊராட்சியில் மேலத்தெரு, ஜனதா நகர், அக்ரகாரம், கீழத்தெரு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக் கொள்கிறோம்.

நவநீதன், அல்லூர்.

அறிவிப்பு பலகை வேண்டும்

திருச்சி மாவட்டம, மருங்காபுரி வட்டம், கல்லுபட்டி தேசிய நெடுஞ் சாலையில் பாலம் வேலை நடைபெறுகிறது. ஆனால் அந்த பகுதியில் எந்த ஒரு அறிவிப்பு பலகையோ, மின்விளக்கு வசதியோ இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதியில் முறையான அறிவிப்பு பலகை மற்றும் மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுதாகர், கல்லுப்பட்டி.

வீடுகளுக்குள் செல்லும் மழைநீர்

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ்நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்கு செல்கிறது. எனவே மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுரேஷ்குமார், துவரங்குறிச்சி.


Next Story