தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நிழற்குடை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நாட்டுக்கல் வீதி துர்க்கை அம்மன் கோவில் முன்பு நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் பஸ் வரும் வரை வெகுநேரம் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னமராவதி
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையிலிருந்து பழைய ஆதனக்கோட்டை செல்லும் சாலையில் கண்டியன்பட்டி அருகே மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வெள்ளைச்சாமி, புதுக்கோட்டை
சாலை ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையத்திலிருந்து செல்லும் காந்திஜி சாலையில் வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், கால்நடை மருந்தகம், பேரூராட்சி அலுவலகம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பூ கமிஷன் கடைகள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையின் வழியாக தினசரி சுமார் 500 மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையில் கடைகளின் ஆக்கிரமிப்பு, வாகனங்கள், பதாகைகள் வைத்து முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்துமதி, கீரமங்கலம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் கனரா வங்கி அருகே ஊத்திக்கேணி வீதி, கருப்பர் கோவில் வீதி, கடைவீதி ஆகிய நான்கு ரோடு சந்திப்பு இருந்து வருகிறது. இந்த ரோட்டில் ஏராளமான மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. மேலும் ஏராளமான பொதுமக்கள் இந்த பகுதியில் நடந்து சென்று வருகின்றனர். இதனால் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்கள் மெதுவாக சென்று வர சம்பந்தப்பட்ட துறையினர் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாரிமுத்து, ஊத்திக்கேணி வீதி.
குரங்குகள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி பகுதியில் உள்ள சந்தைப்பேட்டை, கோட்டை, சத்தியமூர்த்தி நகர், பாப்பா வயல் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே தினந்தோறும் காலையும், மாலையும் நூற்றுக்கணக்கான குரங்குகள் வந்து திரிகின்றன. இவை அனைத்தும் வீட்டில் உள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சந்தைப்பேட்டை.