'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்


சேதம் அடைந்த சாலை


திண்டுக்கல் பழைய கோர்ட்டு வளாகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் இடையே செல்லும் சாலை மழைக்கு சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பெரிய பள்ளங்கள் உருவாகி விட்டதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் செல்லும் சாலையாக இருப்பதால் அதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.


-சிவதாசன், திண்டுக்கல்.


பள்ளி மேற்கூரை சேதம்


திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூரை சேதமாகி இருக்கிறது. கனமழையின் போது வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் நலன்கருதி பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையை சரிசெய்ய வேண்டும்.


-மாரியப்பன், தோட்டனூத்து.


ஒழுகும் அரசு பஸ்


மதுரையில் இருந்து தேனி செல்லும் ஒரு அரசு பஸ்சின் மேற்கூரை சேதமாகி இருப்பதால் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்குள் குடையை பிடித்தபடி பயணிக்கும் நிலை உள்ளது. சேதம் அடைந்த அரசு பஸ்சில் மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.


-செல்வேந்திரன், தேனி.


தேங்கி நிற்கும் மழைநீர்


திண்டுக்கல்லை அடுத்த பித்தளைப்பட்டியில் மழைநீர் முறையாக வடிந்து செல்லாமல் காளியம்மன் கோவில் முன்பு தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-கருணாகரன், பித்தளைப்பட்டி.


எரியாத தெருவிளக்குகள்


ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி ரெயில்வே கேட்டுக்கு வடக்கு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.


-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.


சாலையில் தேங்கும் மழைநீர்


ஆண்டிப்பட்டி தாலுகா ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சத்யாநகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு உரிய வசதி செய்து தரவேண்டும்.


-சென்றாயபெருமாள், தேனி.


பயணிகள் நிழற்குடை சேதம்


உப்புக்கோட்டை அருகே காமராஜபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து காணப்படுகிறது. மழைக்காலமாக இருப்பதால் மக்கள் உள்ளே சென்று அமர்வதற்கு தயக்கம் காட்டும் நிலை உள்ளது. எனவே பயணிகளின் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.


-பொதுமக்கள், காமராஜபுரம்.


பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைப்பு


பழனி அருகே மானூர் ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து உடைந்து விட்டது. இரவில் எதிர், எதிரே வரும் வாகனங்கள் விலகி செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-அறிவாசான், மானூர்.


-----


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.



Next Story