'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

நூலகம் முன்பு தேங்கும் கழிவுநீர்

நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டுவை அடுத்த சாண்டலர்புரத்தில் உள்ள நூலகம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் நூலகத்துக்கு வருபவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

-ஆபிரகாம், சாண்டலர்புரம்.

குண்டும், குழியுமான சாலை

வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல், மதுரைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை என்பதால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக தான் சென்றுவர வேண்டும். அப்போது பெரும் சிரமத்துக்கு பின்னரே அவர்கள் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-பிரவீன், வத்தலக்குண்டு.

தெருநாய்கள் தொல்லை

பெரியகுளத்தை அடுத்த இ.புதுக்கோட்டை கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-சதீஷ், பெரியகுளம்.

புதர்களை அகற்ற வேண்டும்

போடி மேலச்சொக்கநாதபுரம் 8-வது வார்டில் பெண்களுக்கான கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதர்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபிநாத், மேலச்சொக்கநாதபுரம்.

பக்தர்கள் நடைபாதை ஆக்கிரமிப்பு

தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சத்திரப்பட்டி பகுதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-சிவக்குமார், சத்திரப்பட்டி.

ஊராட்சி ஒன்றிய அலுவலக சுற்றுச்சுவர் சேதம்

சின்னமனூரை அடுத்த காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து வருகிறது. மேலும் சுவரில் ஆங்காங்கே பெரிய அளவில் விரிசலும் விழுந்துள்ளது. இதனால் சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.

-கிராம மக்கள், காமாட்சிபுரம்.

அறிவிப்பு பலகை வேண்டும்

உத்தமபாளையத்தில் இருந்து சுருளி தீர்த்தம் செல்லும் வழியில் கோகிலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சுருளி தீர்த்தம் வழியாக செல்லும் பஸ்களின் நேர விவரம் குறித்த அறிவிப்பு பலகை வைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?

-செல்வராஜ், கோகிலாபுரம்.

புதர்மண்டி கிடக்கும் விளையாட்டு மைதானம்

நிலக்கோட்டை தாலுகா கோட்டூர் மைக்கேல்பாளையத்தில் அமைக்கப்பட்ட அம்மா விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்.

-குணசேகரன், மைக்கேல்பாளையம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

பழனி பழைய தாராபுரம் சாலை, திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். எனவே குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலு, பழனி.

சேதமடைந்த சாலை

தேனி க.விலக்கு பகுதியில் வைகை அணைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அணையை பார்வையிட வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், தேனி

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story