தினத்தந்தி புகார் ெபட்டி


தினத்தந்தி புகார் ெபட்டி
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

தினத்தந்தி புகார் ெபட்டி

கன்னியாகுமரி

விபத்து அபாயம்

நாகர்கோவில் சிதம்பரம்நகர் சாலை ஓரத்தில் கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்பு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும், பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி சேதமடைந்த சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பு அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கென்னடி ரோட்ரிகோ, கோட்டார்.

நல்லி மாற்றப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் யாதவர் மேற்கு தெருவில் ஓம் சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்குழாயின் நல்லி சேதமடைந்து குடிநீர் வீணாக பாய்ந்தது. இதுபற்றி 'தினந்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நல்லியை மாற்றி விட்டு புதிய நல்லியை பொருத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

பள்ளம்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளம்துறையில் இருந்து சுனாமிகாலனிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

-சகாய ஜார்ஜ், சுனாமி காலனி.

தெருநாய்களால் தொல்லை

குளச்சலில் ஆசாத்நகர், செட்டி தெரு, இலப்பவிளை, பி.எஸ்.புரம் ஆகிய இடங்களில் தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரம் வாகனங்களில் செல்வோரை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியோர்கள் அச்சத்துடனேயே அந்த பகுதிகளை கடந்து செல்கின்றனர். எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜ்மல், குளச்சல்.

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

திங்கள்சந்தையில் இருந்து இரணியல், குருந்தன்கோடு, ஆளூர் வழியாக நாகர்கோவிலுக்கு 12 'எச்' என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. திங்கள்சந்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

-ஜான் ஆண்டனி, தெக்கன்திருவிளை.

ஆபத்தான வளைவு

இரணியல் சந்திப்பில் இருந்து கண்டன்விளைக்கு செல்லும் சாலையில் வளைவான பகுதி உள்ளது. ஆபத்தான இந்த வளைவு பகுதியால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி வளைவு பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.தேவதாஸ், ராமநாதபுரம், சரல்.

நடவடிக்கை தேவை

தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டித்தோப்பில் இருந்து மண்ணடிக்கு செல்லும் கால்வாய் கரையோர சாலை உள்ளது. இந்த சாலையை கடந்துதான் மண்ணடி, தென்பாறை கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், இந்த சாலை வழியாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.


Next Story