'தினத்தந்தி' செய்தி எதிரொலி:குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி:குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கூடலூர் அருேக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.

தேனி


கூடலூர் நகரப் பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் 12-வது வார்டு தொட்டியர் காளியம்மன் கோவில்தெரு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி, நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை ஆகியோர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் மூலம் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.


Related Tags :
Next Story