மேட்டூர் அணையின் உபரிநீரை வைகை ஆற்றில் சேகரிக்க வேண்டும் கள் இயக்க தலைவர் நல்லுசாமி பேட்டி

நாமக்கல்
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள தனியார் கோவில் திருமண மண்டபத்தில் கள் இயக்க தலைவர் நல்லுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனவரி மாதம் 21-ந் தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்துவது விரிவுபடுத்தப்படும். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கள்ளுக்கு விதித்த தடையை நீக்கும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையை வெளியிட வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை தெற்கில் உள்ள வைகை ஆற்றில் சேகரிப்பதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






