கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 150 படகுகள் சேதம்; நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை


கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 150 படகுகள் சேதம்; நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை
x

கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதம் அடைந்தது. படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

படகுகள் சேதம்

மாண்டஸ் புயலானது நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றில் கோவளம் பகுதியில் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த படகுகளை மீன்வளத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். சேதம் அடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வரை கடல் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது.

சிக்னல் பெயர்ந்து விழுந்தது

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கிழக்கு கடற்கரை சாலை கேளம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி எதிரே சாலை நடுவில் உள்ள சிக்னல் பெயர்ந்து கீழே விழுந்தது. பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் கேளம்பாக்கம் போலீசார் அதனை அப்புறப்படுத்தினர்.

அதே போன்று திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் வேப்பமரம் சாய்ந்தது. திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்புறப்படுத்தப்பட்டது.

பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.


Next Story