மறைமலைநகர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதம்


மறைமலைநகர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதம்
x

மறைமலைநகர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதமடைந்ததால் மின்வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள தனியார் நிறுவனத்திற்கு டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் நடும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளம் எடுக்கும்போது கூடலூர் ஏரியில் இருந்து மறைமலைநகரில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாயை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த கூடலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story