பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டு சேதம்
பா.ஜனதா கொடிக்கம்ப கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்
மங்களமேடு அடுத்துள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பா.ஜனதா கட்சியின் 30 அடி உயர கொடிக்கம்பம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மர்ம ஆசாமிகள் கழட்டி சென்றதுடன், டிஜிட்டல் பேனர் மற்றும் கல்வெட்டுகளையும் சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story