குற்றாலம் அருகே கோவில் சிலை சேதம் - போலீசார் விசாரணை


குற்றாலம் அருகே கோவில் சிலை சேதம் - போலீசார் விசாரணை
x

குற்றாலம் அருகே கோவில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி


தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலின் பின்புறம் பன்றி மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் சிலையை யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த கோவிலை நிர்வகித்துவரும் மாடசாமி என்பவர் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story