கன்னிசேரி புதூர் பஞ்சாயத்தில் குடிநீர் வினியோகம் பாதிப்பு


கன்னிசேரி புதூர் பஞ்சாயத்தில் குடிநீர் வினியோகம் பாதிப்பு
x

கன்னிசேரி புதூர் பஞ்சாயத்தில் குடிநீர் வினியோகம் பாதிப்பு குறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் யூனியன் கன்னிசேரிபுதூர் கிராம பஞ்சாயத்தில் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்ட நிலையில் சிறப்பு தணிக்கைக்கு பின்பு ரூ. 35 லட்சம் முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில் 15 தினங்களுக்குள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் விளக்கம் அளிக்க கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி வெயிலுமுத்து, ஆதி தமிழர் கட்சியின் சுந்தரராஜ், தலித் விடுதலை இயக்க மாணவர் அணி செயலாளர் பீமாராவ், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகி மணிமாறன் உள்ளிட்டோர் கலெக்டரை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கன்னிசேரி புதூர் பஞ்சாயத்தில் கடந்த 5 மாதங்களாக தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 5 தினங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாத நிலை உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.



Next Story