சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்


சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்
x

டி.மணல்மேட்டில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

டி.மணல்மேட்டில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே உள்ள டி.மணல்மேட்டில் கிராம கூட்டுறவு அங்காடி(ரேஷன் கடை) செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு வளையல்சோழகன், காடுவெட்டி, நட்சத்திரமாலை, ரவணயன்கோட்டகம், நடுவலூர் உள்ளிட்ட கிராம பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்த அங்காடி கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இதன் காரணமாக இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

புதிதாக கட்ட கோரிக்கை

தற்போது அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிகிறது. மழையால் ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகி வருகிறது. கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் இந்த அங்காடிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.ஆகவே, சேதமடைந்த இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story