சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்


சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்
x

அருப்புக்கோட்டையில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் கூறினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் கூறினார்.

நகரசபை கூட்டம்

அருப்புக்கோட்டை நகரசபையின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிசாமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன்விவரம் வருமாறு:-

பாலசுப்ரமணி:- குடிநீர் குழாய் இணைப்பிற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் உப்புநீராக உள்ளது.

தனலட்சுமி:- வார்டு பகுதிகளில் மினி பவர் பம்புகள், டேங்க் ஆகியவை சேதமாகி உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.

துப்புரவு பணியாளர்கள்

கண்ணன்:- எங்கள் பகுதியில் தாமிரபரணி குடிநீர் வினியோக பணிகள் நடைபெறவில்லை. திருச்சுழி சாலையில் கோவில் அருகே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

ஜெயகவிதா:- விரிவாக்கப்பகுதியில் குழாய்கள் பழுதடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. துப்புரவு பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்களை அதிகரிக்க வேண்டும்.

டுவிங்கிளின் ஞானபிரபா:- புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு உள்ள கழிப்பறை மற்றும் சைக்கிள் நிறுத்தம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. ஜோதிபுரம் 2-வது தெருவில் வாருகால் பணி மந்தமாக நடைபெறுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி

தலைவர்:- அனைவருக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குண்டும், குழியுமான சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர் நல அலுவலர் ராஜநந்தினி பேசுகையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்லவும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story