மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு


மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு
x

ராமநாதபுரத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக புதிய பஸ்நிலைய மேற்கூரை திடீரென்று இடிந்துவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக புதிய பஸ்நிலைய மேற்கூரை திடீரென்று இடிந்துவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி இடைவிடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக கட்டிடங்கள் மழைநீரில் நனைந்து வருகின்றன. ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் நகர் மத்தியில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் முறை யான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அடிக்கடி பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து வருகின்றன.

இவ்வாறு கடந்த 2 வருடத்தில் மட்டும் 5 தடவைக்கு மேல் மேற்கூரை இடிந்து பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் ராமேசுவரம் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் நிலைய மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தன.

அச்சம்

இந்த சிமெண்டு காரைகள் தரையில் விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. தொடர் மழை காரணமாக ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரை காரைகள் தண்ணீரில் ஊறி இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்கூரை இடிந்து விழுந்ததை கண்டு அந்த பகுதியின் அருகில் நின்றிருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அச்சமுடன் நகர்ந்து சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இடிந்து விழுந்த காரைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும், மேற்கூரையில் தொங்கி கொண்டு இருந்த இடிபாடுகளை உடனடியாக இடித்து அதனை சரிசெய்ய உத்தரவிட்டார்.

நிரந்தர தீர்வு

நகராட்சி தலைவரின் உத்தரவை தொடர்ந்து மேற்கூரை களை சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. புதிய பஸ்நிலையம் கட்ட அனுமதி பெறப்பட்டு உள்ளதால் விரைவில் பஸ்நிலைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று நகராட்சி தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.


Next Story