முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
x

விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மாம்பழப்பட்டு சாலை ரெயில்வே கேட் அருகில் உள்ள செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்தலும், காப்பு கட்டுதலும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அந்த பொங்கலை முத்துமாரியம்மனுக்கு படையலிட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story