தோடர் இன மக்களுடன் நடனம்: கவர்னர் ஆர்.என். ரவி உற்சாகம்


தோடர் இன மக்களுடன் நடனம்: கவர்னர் ஆர்.என். ரவி உற்சாகம்
x

தோடர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டு களித்த கவனர் ஆர்.என்.ரவி, உற்சாக மிகுதியில் அவர்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.

நீலகிரி,

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் 3 நாள் பயணமாக இன்று ஊட்டி சென்றார். ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள தோடர் பழங்குடியினரின் குலதெய்வ கோவிலான கூம்பு வடிவிலான மூன்போ கோவிலுக்கு சென்ற கவர்னர் அந்த கோவில் பற்றி பழங்குடியின தலைவர்களிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து தோடர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டு களித்தார். உற்சாக மிகுதியில் அவரும் தோடர் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். அப்போது பழங்குடியின மக்கள் , அவர்களுடைய கைவினைப் பொருட்களை கவர்னருக்கு பரிசாக வழங்கினர். கோரிக்கை மனுவும் அளித்தனர்.

1 More update

Next Story