டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 8:00 PM GMT (Updated: 14 Oct 2023 8:00 PM GMT)

கரடியை பிடிக்க கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ ரேஞ்ச் எண் 1,2,3,4 ஆகிய தேயிலை தோட்ட குடியிருப்புகளில் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருகிறது. ரேஞ்ச் எண் 1-ல் உள்ள வீடுகளின் சமையல் அறை மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தியது. உப்பட்டி அருகே நெல்லியாளம் டேன்டீயையொட்டி பெருங்கரை பகுதியில் புகுந்து வேட்டை தடுப்பு காவலர் சிவகுமாரை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வன காப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கரடி அட்டகாசத்தால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க கோரி நெல்லியாளம் டேன்டீ ரேஞ்ச் எண்.1-ல் ஆஸ்பத்திரி அருகே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சேரம்பாடி போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


Next Story