வீடுகள் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்


வீடுகள் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
x

கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கத்தில் வீடுகள் அருகே தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறது. எனவே ஆபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கத்தில் வீடுகள் அருகே தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறது. எனவே ஆபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாழ்வாக செல்லும் மி்ன்கம்பிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் கொத்தங்குடி செல்லும் சாலையில் மந்தாகரை என்ற இடத்தில் சாலையோரம் 10-க்கும் மேற்பட்ட குடிசைவீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்லும் வகையிலும், அப்பகுதியில் தெரு மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்கும் மின்கம்பங்கள் நடப்பட்டு அதன் வழியே மின்கம்பிகள் சென்று கொண்டிருக்கின்றன. இந்த மின்கம்பிகள் தாழ்வாகவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் பகுதி அருகே செல்கிறது.இதனால் வீட்டு மாடிப்படியில் கூட ஏறிச்செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது மாடிப்பகுதியில் மின்கம்பிகள் பட்டு சுவரில் மின்சாரம் பாய்ந்து வருவதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மாற்றி அமைக்க வேண்டும்

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மந்தாகரை பகுதியில் உள்ள குடியிருப்புக்கு மேல் பகுதியிலும் மரங்களிலும் மின்கம்பிகள் தொட்டுக்கொண்டு மிகவும் தாழ்வாக சென்று கொண்டிருக்கின்றன. மிகவும் ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருக்கும் இந்த மின்கம்பிகளால் மிகுந்த அச்சம் அடைந்து வருகிறோம். தற்போது அரசின் சார்பில் வீடு வழங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு மேல் தளம் அமைக்கமுடியாத நிலையில் இருந்து வருகிறோம். எங்கள் வீட்டின் மீது செல்லும் மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு அடிக்கடி குடிசை வீடுகளில் தீப்பிடிக்கும் நிலை உள்ளது.எனவே இந்த நிலையை போக்க வீட்டின் மேல் மிக அருகில் செல்லும் மின் கம்பியை ஆபத்து ஏற்படும் முன்பு மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story