நெகமம் அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்யும் மாணவர்கள்- கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை


நெகமம் அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்யும் மாணவர்கள்- கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
x

நெகமம் அருகே பஸ்சில் தொங்கியபடி ஆபத்தாக மாணவர்கள் பயணம் செய்கிறார்கள. அதனால் கூடுதல் பஸ்கள் இயக்க ேவண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே பஸ்சில் தொங்கியபடி ஆபத்தாக மாணவர்கள் பயணம் செய்கிறார்கள. அதனால் கூடுதல் பஸ்கள் இயக்க ேவண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆபத்தான பயணம்

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளி நேரத்தில் போதிய அளவு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தாக பயணித்து வருகின்றனர் இதனால் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் அடைகின்றனர். எனவே பள்ளி நேரத்தில் காலையும், மாலையும் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:- சேரிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் படிப்பதற்காக கிணத்துக்கடவு, தாமரைக்குளம், மாசநாயக்கன்புதூர், நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், பட்டணம், செட்டியக்காபாளையம், தேவணாம்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்கு காடு, குளத்துப்பாளையம், கப்பளாங்கரை, செட்டிபுதூர், நெகமம், ஆண்டிபாளையம், வஞ்சிபாளையம், மஞ்சம்பாளையம் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து அதிகளவில் மாணவ-மாணவிகள் வருகின்றனர்.

இதில் கிணத்துக்கடவில் நெகமம் செல்வதற்காக பயணிகள் ஏறுகின்றனர். பட்டணம் வரும்போது பஸ்சில் இடம் இல்லாமல் படியில் தொங்கிய நிலையில் மாணவர்கள் வருகின்றனர். பட்டணத்தில் இருந்து சேரிபாளையம் பள்ளிக்கு செல்ல 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அதே பஸ்சில் ஏறவேண்டியுள்ளது. அப்படி ஏறும்போது இன்னும் அதிகளவில் கூட்டம் சேருவதுடன் அதிகளவில் படிக்கட்டில் மாணவ-மாணவிகள் தொங்கி வரவேண்டிய நிலையில் உள்ளது. மேலும் பயணிகள் அந்தந்த பயணிகள் நிறுத்தும் இடத்தில் இறங்கினால் எல்லோரும் பஸ்சில் இருந்து இறங்கிய பின் பயணிகள் இறங்கவேண்டிய உள்ளது. பயணிகள் இறங்கிய பின் நாங்கள் மீண்டும் பஸ்சில் ஏறவேண்டும். இதனால் காலதாமதம் ஆகிறது. பள்ளிக்கு உரிய நேரத்திற்கு செல்லமுடிவதில்லை.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

மேலும் பஸ் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. நேற்று முன்தினம் கூட கோவையில் இருந்து சேரிபாளையம் வந்த அரசு பஸ் தாமரைக்குளம் பகுதியில் பழுதாகி நின்று விட்டது. இதற்கு மாறாக நீண்ட நேரம் கழித்து மாற்று பஸ் வந்தபின் நாங்கள் பள்ளிக்கு சென்றோம். எனவே காலை, மாலை நேரத்தில் கிணத்துக்கடவில் இருந்து சேரிபாளையம் அரசு பள்ளி வரை கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story