தர்கா கந்தூரி விழா


தர்கா கந்தூரி விழா
x

ராஜகிரி தர்கா கந்தூரி விழா நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

தஞ்சாவூர் அருகே ராஜகிரியில் ஹஜ்ரத் பாகர்ஷா ஒலியுல்லா ஷரீப் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழநடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பானுவா ஜமாத்துடன் கொடிசந்தனக்குடம் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தர்காவாசல் வந்தடைந்தது. பின்பு கொடியேற்றி பாவா ரவுலா ஷரீபிற்கு சந்தனம் பூசி துஆ ஓதி பொது மக்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.இதில் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராஜகிரி தர்கா ஜமாத்தார்கள் மற்றும் முத்தவல்லி செய்திருந்தனர்.

1 More update

Next Story