திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று மாலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவில் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகளுக்கு நடைபெற உள்ள அரையாண்டுத் தேர்வு எல்லா ஆண்டும் நடப்பது போல் நடைபெறும். தேர்வு விடுமுறை குறித்து இதுவரை முடிவு செய்ய வில்லை. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி இணைப்பது அதிக அளவு மாணவர் சேர்க்கை வரவேண்டும் என்பதற்குதான். தொடக்கப்பள்ளியில் 10 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அதனால் தொடக்கப் பள்ளிகள் மூடப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story