அருணாசலேஸ்வரர் கோவிலில் எஸ்.பி.வேலுமணி சாமி தரிசனம்


அருணாசலேஸ்வரர் கோவிலில் எஸ்.பி.வேலுமணி சாமி தரிசனம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எஸ்.பி.வேலுமணி சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலைக்கு வருகை தந்தை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முக்கூர் சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story